< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
|7 Oct 2022 6:20 PM IST
வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
தலைமறைவு
சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவரை கடந்த 2015-ம் ஆண்டு பணத்துக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(41) என்பவர் கடத்தி சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட கார்த்திக்கை போலீசார் மீட்டனர். ஆனால் மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த மகேஷ், நேற்று சென்னை பேசின்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக புழல் உதவி கமிஷனர் ஆதிமூலத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று மகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.