< Back
மாநில செய்திகள்
3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி
|
24 July 2022 1:14 PM IST

திருப்போரூரில் ஜாமீனில் வெளிவந்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செம்மஞ்சேரி சுனாமிநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் செம்மஞ்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் 2019-ம் ஆண்டு முதல் தலைமறைவானார். இதையடுத்து இவரை தேடி வந்த போலீசார் திருப்போரூரில் தலைமறைவாக இருப்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் திருப்போரூர் பகுதிக்கு சென்று ரமேஷை கைது செய்து செம்மஞ்சேரி அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்