< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
|11 Jun 2023 12:53 AM IST
கூடங்குளம் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிய வழக்கில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறையை சேர்ந்த ராஜன் என்ற ராஜாசிங் என்ற பகவத்சிங் (வயது 59) என்பவர் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் விசாரணைக்கு கடந்த 12 ஆண்டுகள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்து இருந்தது. அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவல்லத்தில் தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.