< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே மின் விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மின் விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

தினத்தந்தி
|
9 Oct 2022 4:44 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே மின் விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டனர்.

தற்கொலை மிரட்டல்

சென்னை அடுத்த செங்குன்றம் காந்திநகரை சேர்ந்தவர் ஆப்பிரகாம் (வயது 45). இவர் எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கும் அந்த சோதனைச்சாவடியில் டீ விற்பனை செய்யும் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆப்பிரகாமை சோதனைச்சாவடி வளாகத்தில் இருந்து வெளியேறும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. சோதனைசாவடியில் இருந்து போலீசார் வெளியேற சொன்னதால் மன உளைச்சலில் இருந்த ஆப்பிரகாம், எளாவூர் பஜாரில் உள்ள 30 அடி உயரம் கொண்ட ஒரு மின் விளக்கு கோபுர கம்பத்தின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மீட்பு

அவர் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்ததால் எளாவூர் பஜாரில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து அங்கு சென்ற ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆப்பிரகாமை அங்கிருந்து இறக்கி மீட்டனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்