< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடியவர் கைது
|4 Sept 2022 1:51 PM IST
திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (வயது 72). ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தற்போது தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய கிணறு பகுதிக்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் மின்மோட்டார் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து தசரதன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்களை திருடிய செருக்கனூர் காலனி சூர்யா (19) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.