< Back
மாநில செய்திகள்
தேவகோட்டையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்-மொபட்டில் மோட்டார் சைக்கிளால் மோதி வெறிச்செயல்
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்-மொபட்டில் மோட்டார் சைக்கிளால் மோதி வெறிச்செயல்

தினத்தந்தி
|
18 July 2023 12:15 AM IST

நடுரோட்டில் பட்டப்பகலில் மொபட்டில் வந்த இளம்பெண்ணின் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து அவருடைய கணவரே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவகோட்டை,

நடுரோட்டில் பட்டப்பகலில் மொபட்டில் வந்த இளம்பெண்ணின் மீது மோட்டார் சைக்கிளால் மோதி கீேழ தள்ளி, அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து அவருடைய கணவரே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவருடன் வாழ மறுப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா (30). இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளாள்.

பிரபாகரனின் வீடு, தேவகோட்டை சரசுவதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் உள்ளது. அவருடைய மனைவி, தேவகோட்டையில் அழகு நிலைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து பிரபாகரன், 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் தனது சொந்த ஊரான கடம்பாகுடியில் இருந்தார். தனது மனைவியை கடம்பாகுடிக்கு வருமாறு அழைத்தார். ஆனால் சூரியா செல்ல மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிைலயில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக உறவினர்கள் சமரசம் செய்தும் சூரியா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டதாக தெரிகிறது.

மொபட்டில் வந்தார்

கணவர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவருடன் வாழ விருப்பம் இ்ல்லை எனவும் போலீஸ் நிலையத்தில் சூரியா கூறியதாக தெரிகிறது. இதனால் மனைவி மீது பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார். மேலும் மனைவியின் நடத்தை மீதும் அவருக்கு சந்ே்தகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சூரியா மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அங்கு ேமாட்டார் சைக்கிளில் வந்து பிரபாகரன் தயாராக இருந்துள்ளார்.

மனைவி வந்ததும், தனது மோட்டார் சைக்கிளால் மனைவியின் வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி சூர்யா கீழே விழுந்து அலறினார்.

கழுத்தை அறுத்து கொலை

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், தான் கொண்டு வந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். பின்னர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர கொலையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் தேவகோட்டை துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமசிவாயம் மற்றும் போலீசார் சமபவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சூரியா உடலை பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் சரண்

மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கணவர் நடுரோட்டில் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரியாவை அவருடைய கணவரே கொன்று கைதானதால், இவர்களுடைய மகள் பரிதவித்து வருகிறாள். சூரியாவின் தாயார் வசம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்