< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வலைவீச்சு
|22 May 2023 11:36 PM IST
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் அன்னமங்கலம் பகுதியில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த இன்னாசி (வயது 40) என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது அவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இன்னாசியை வலைவீசி தேடி வருகின்றனர்.