< Back
மாநில செய்திகள்
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தினத்தந்தி
|
17 Aug 2022 2:46 PM IST

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் முள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). இவருடைய மனைவி நிவேதா (வயது 26). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வந்தனர். செல்வகுமார் பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மனைவியிடம் ஒரகடம் வரை சென்று வருகிறேன். என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். மீண்டும் திரும்பி மோட்டார் சைக்கிளில் ஒரகடம் மேம்பாலம் அருகே வரும்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு செல்வகுமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்