< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில்  ஈடுபட்ட ஒருவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

தினத்தந்தி
|
16 July 2023 2:28 PM IST

செங்கல்பட்டு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி பகுதி சேர்ந்தவர் அருண் (வயது 22), இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்த இரவு வீட்டிற்கு செல்லும் போது காரணைப்புதுச்சேரி கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிள் வந்து 3 பேர் கொண்ட கும்பல் அருணை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அருண் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் பறித்த வழக்கில் சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 28), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்