ஈரோடு
கோபி அருகே பட்டாசு தயாரிக்க ெவடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது
|கோபி அருகே பட்டாசு தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்
கோபி அருகே பட்டாசு தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு தயாரிக்கும் பொருட்கள்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் வானமத்தாப்புகள் மற்றும் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வெட்டையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கைது
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய வீட்டை சோதனை செய்தனர். அப்போது பட்டாசு தயாரிக்க வெடி பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பொருட்களை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கணேசனை கைது செய்தனர்.