< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு
|27 Oct 2023 12:15 AM IST
கன்னியாகுமரியில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் முருகன் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.