< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
உடல்நலக்குறைவால் அவதி: கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை
|10 Aug 2022 2:46 PM IST
அடையாறு பகுதியில் உடல்நலக்குறைவால் கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசர்பாடி சிவசக்தி விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 58). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்று இளங்கோவன் அடையாறு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளார், உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இளங்கோவனின் உடல் கூவம் ஆற்றில் மிதந்து வந்தது.
இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு இளங்கோவனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.