< Back
மாநில செய்திகள்
வருகிற 17-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
மாநில செய்திகள்

வருகிற 17-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
15 Oct 2023 9:50 AM IST

வருகிற 17-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வருகிற 17-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் 19-ம் தேதி வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்