வங்கக்கடலில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!
|வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், மே 2, 3-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும்,4, 5-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. என்று கூறினார்.