< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
காட்டாங்கொளத்தூரில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார கம்பி; சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
|8 Nov 2022 3:52 PM IST
காட்டாங்கொளத்தூரில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார கம்பியை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் இந்திரா நகர் பிரதான சாலை ஓரமாக உள்ள மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிய நிலையில் செல்கிறது. தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால் திடீரென பலத்த காற்று வீசும் போது மின்சார வயர் அறுந்து விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை தாழ்வாக தொங்கிய நிலையில் செல்லும் மின்சார கம்பியை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.