< Back
மாநில செய்திகள்
தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்

தினத்தந்தி
|
26 July 2023 1:00 AM IST

பழனியில் தாழ்வாக ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது.

கோவை மாவட்டம் சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து அவ்வப்போது பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பயிற்சி விமானங்கள் பறந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 போர் விமானங்கள் சாகசம் செய்தபடி அதிக சத்தத்துடன் சென்றது. இந்நிலையில் நேற்று பழனி பகுதியில் மதியம் சுமார் 12 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்தது. இதனால் அங்கு அதிக சத்தம் எழுந்ததால் வீடுகளில் இருந்தவர்கள் என்னமோ, ஏதோ என்று பதறியடித்தபடி வெளியே ஓடி வந்து பார்த்தனர். அந்த பகுதியில் ராணுவ ெஹலிகாப்டர் வட்டமடித்து விட்டு வேகமாக சென்றது. பின்னர் சிறிது நேரத்தில் பழனி பஸ் நிலையம் பகுதியில் மீண்டும் ஒரு முறை ராணுவ ெஹலிகாப்டர் வட்டமிட்டபடி சென்றது. இந்த காட்சியை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் பழனி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்