< Back
மாநில செய்திகள்
எரியோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
மாநில செய்திகள்

எரியோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

தினத்தந்தி
|
3 July 2022 2:42 PM IST

எரியோடு காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

வடமதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் காரபத்து பகுதியை சேர்ந்த வீரக்குமார் மகள் மோனிஷா(வயது 20). இவரும் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலகுமார்(22)என்பவரும் காதலித்து வந்து உள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பால்குமார்-மோனிஷா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்கள் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரமறுத்ததால் மாப்பிள்ளை வீட்டார் உடன் மணப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்