< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்து
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்து

தினத்தந்தி
|
6 April 2023 4:30 PM IST

மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய லாரி சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. லாரியில் பின்னால் வந்த காரும் இரும்பு கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர், கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்