மதுரை
உசிலம்பட்டி அருேக கடைக்குள் புகுந்த லாரி; வியாபாரி பலி
|உசிலம்பட்டி அருகே கடைக்குள் லாரி புகுந்ததில் வியாபாரி பலியானார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கடைக்குள் லாரி புகுந்ததில் வியாபாரி பலியானார்.
கடைக்குள் புகுந்த லாரி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). இவர் அதே ஊரில் சாலையோரம் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் செக்கானூரணியில் இருந்து கண்ணணூர் வழியாக கரடிப்பட்டிக்கு நேற்று சென்ற லாரி ஒன்று திடீரென்று டிைரவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த லாரி சாலையோரம் இருந்த பிரபுவின் கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.
சாவு
இ்தில் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வியாபாரி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். லாரியில் வந்த கரடிப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (28) படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு படுகாயம் அடைந்த ராம்குமாரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிைரவரை போலீசார் தேடி வருகின்றனர். நல்லவேளை லாரி மளிகை கடைக்குள் புகுந்த போது வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.