சென்னை
மதுரவாயல் அருகே டயர் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்த லாரி
|மதுரவாயல் அருகே டயர் வெடித்ததால் சாலையில் லாரி கவிழ்ந்தது.
மீஞ்சூரில் இருந்து குன்றத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்காக சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது. லாரியை ராஜேஷ் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். அடையாளம் பட்டு அருகே வந்தபோது திடீரென லாரியின் டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராஜேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ராட்சத கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.