< Back
மாநில செய்திகள்
ஒரகடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதி கவிழ்ந்த லாரி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஒரகடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதி கவிழ்ந்த லாரி

தினத்தந்தி
|
14 March 2023 3:02 PM IST

ஒரகடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது.

கார்- லாரி மோதல்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). லாரி டிரைவரான இவர் செங்கல்பட்டு பகுதியில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சிங்கப்பெருமாள் கோவில்- ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

லாரி ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க வந்த கார் மீது மோதி பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்து ஜல்லி கற்கள் சாலையில் சரிந்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கார் ஓட்டி வந்த தாம்பரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 36) ஆகிய இருவரும் லேசான காயம் ஏற்பட்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து சாலையில் சரிந்த ஜல்லிக்கற்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்