< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பனை மரங்கள் ஏற்றிச் சென்ற லாரி சிறை பிடிப்பு
|23 Dec 2022 12:40 AM IST
குளமங்கலத்தில் பனை மரங்கள் ஏற்றிச் சென்ற லாரி சிறை பிடிக்கப்பட்டது.
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் பகுதியிலிருந்து கடந்த சில நாட்களாக பனை மரங்கள் வெட்டி செங்கல் சூளைக்காக அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சென்று தமிழக அரசு பனை மரங்களை வளர்க்க வேண்டும். இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஊராட்சிகளில் பனை விதைகளை நடவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பனை மரங்களை வெட்டக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியிலிருந்து ஒரு லாரியில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் பனை மரங்கள் கொண்டு செல்வதைப்பார்த்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் அந்த லாரியை சிறைப்பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.