செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு
|சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்வர் (வயது 49). லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அச்சரப்பாக்கம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அன்வர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1,000-த்தை பறித்து கொண்டனர். பின்னர் கத்தியால் தலையில் வெ ட்டி விட்டு அவர் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் அன்வரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து மறை மலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.