தஞ்சாவூர்
வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீயில் எரிந்து நாசம்
|சுவாமிமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.
கபிஸ்தலம்:
சுவாமிமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருேக உள்ள சுவாமிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை நடைபெற்ற வயல்களில் இருந்து வைக்ேகால்கள் சேகரிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் வைக்கோல் ஏற்றுவதற்காக கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு வந்து செல்கிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றுவதற்காக ஒரு லாரி சுவாமிமலை அருகே உள்ள கொந்தகை பகுதிக்கு வந்தது. கொந்தகை பகுதியில் வைக்கோல் ஏற்றி விட்டு இந்த லாரி சுவாமிமலை அருகே திருப்புறம்பியம்-கொந்தகை ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது.
தீயில் எரிந்து நாசம்
அப்போது லாரியில் இருந்த வைக்கோல் உயரே சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களுடன் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் தீ மளமளவென பரவி லாரி மற்றும் அதில் இருந்த வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.