< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
29 July 2022 3:06 PM IST

பள்ளிப்பட்டு அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளிப்பட்டு அருகே வெங்கம் பேட்டை காலனி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக மண்ணால் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நேற்று ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியின் பாரம் தாங்காமல் மண் சாலை சரிந்ததால் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்