< Back
மாநில செய்திகள்
திருமங்கலத்தில் தடுப்புச்சுவர் மீது லோடு வேன் மோதி கவிழ்ந்தது
சென்னை
மாநில செய்திகள்

திருமங்கலத்தில் தடுப்புச்சுவர் மீது லோடு வேன் மோதி கவிழ்ந்தது

தினத்தந்தி
|
8 Jan 2023 1:02 PM IST

திருமங்கலத்தில் தடுப்புச்சுவர் மீது லோடு வேன் மோதி கவிழ்ந்தது.

சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில், நேற்று முன்தினம் காலை லோடு வேன் ஒன்று மணலியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த வேனில் 8 பேர் பயணம் செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த நவீன் குமார் (வயது 27) என்பவர் லோடு வேனை ஓட்டி வந்தார். இந்த நிலையில், திருமங்கலம் மேம்பாலத்தின் கீழ் சென்ற போது அப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பி மீது மோதியதில் லோடு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் நவீன்குமார், மணலியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 30), திருப்பதி (18), மாரிமுத்து (66), கூடலிங்கம் (37) உட்பட 8 பேரும் காயமடைந்தனர். விபத்து குறிந்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்