< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை..!
|3 Oct 2023 9:18 AM IST
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் ஆயுள் தண்டனை கைதி மப்பேடு பகுதியைச் சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன் (63) கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் கஜேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில், 2009-ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் கஜேந்திரன் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சிறை கைதி தற்கொலை குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.