< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்
|12 Aug 2022 3:10 PM IST
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இவை தண்ணீர், உணவு தேடி தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வெள்ளியங்கிரி என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அங்கு வளர்ப்பு நாய்களை பிடித்து செல்ல முயற்சி செய்ததது. ஆனால் பாதுகாப்பாக நாயை அடைத்து வைத்திருந்ததால் சிறுத்தையால் பிடித்து செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.