< Back
மாநில செய்திகள்
சலவை தொழிலாளியை உருட்டுக்கட்டையால் தாக்கிய அண்ணன் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

சலவை தொழிலாளியை உருட்டுக்கட்டையால் தாக்கிய அண்ணன் கைது

தினத்தந்தி
|
12 Jan 2023 11:55 PM IST

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி சலவை தொழிலாளியை உருட்டுக்கட்டையால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்ப தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 67). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முத்தையன் (39). இவருக்கு அனிதா (35) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கடைவீதியில் முத்தையன் தம்பி மாரியப்பன் சலவை வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த முத்தையன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி அருகே இருந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அப்பகுதி மக்கள் மீட்டு உடையார்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்