< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

தினத்தந்தி
|
9 Jan 2023 2:39 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்