< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோடை விடுமுறையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள்
|29 April 2023 11:11 AM IST
பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி, நீண்ட நேரம் காத்திருந்து சனி பகவானை சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில், இன்று சனிக்கிழமை என்பதால், கோவிலில் கூட்டம் நிறைந்து கானப்பட்டது. மேலும், தொடர் விமுறை என்பதால், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி, நீண்ட நேரம் காத்திருந்து சனி பகவானை சாமி தரிசனம் செய்தனர்.