< Back
மாநில செய்திகள்
கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
17 July 2023 12:15 AM IST

கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பங்கு தந்தையர்கள், குருமட அதிபர்கள், அருட்தந்தையர்கள் முன்னிலையில் திருப்பலி, சிறிய தேர்பவனியும் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் திருப்பலியும், பெரிய தேர்பவனியும் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் கார்மேல் அன்னை எழுந்தருளினார்.

தொடர்ந்து தேர்பவனி சில்வர் பீச் ரோடு, நீதிபதிகள் குடியிருப்பு சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை, மஞ்சக்குப்பம் மைதான சாலை வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனி செல்லும் போது, மலர் தூவி கிறிஸ்தவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும், கொடி இறக்கமும் நடந்தது.

மேலும் செய்திகள்