< Back
மாநில செய்திகள்
கடைத்தெருவில் ஒரு வழிப்பாதை அமைக்க வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கடைத்தெருவில் ஒரு வழிப்பாதை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

நாகூர் தர்காவிற்கு வரும் வாகனங்களுக்கு கடைத்தெருவில் ஒரு வழிப்பாைத அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

நாகூர்:

நாகூர் தர்காவிற்கு வரும் வாகனங்களுக்கு கடைத்தெருவில் ஒரு வழிப்பாைத அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். நாகூர் வடபுறம் தெரு, பெரிய கடை தெரு, நியூ பஜார் சாலை, நெல்லுக்கடை தெரு, செய்யது பள்ளி தெரு ஆகியவை அதிக அளவில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலை ஆகும். விழா காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் வாகனங்கள் கடைத்தெரு பகுதிகளில் இருப்புறமும் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரியகடை தெரு, நியூ பஜார் சாலை வழியாக வாகனங்கள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நாகூர் தர்காவிற்கு வரும் வாகனங்களுக்கு கடை தெருவில் ஒரு வழிப்பாைத அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு வழிப்பாதை

இதுகுறித்து நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம் கூறுகையில்:- வாகனம் நிறுத்தும் இடம் இல்லாத காரணத்தால் நாகூர் தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்து தெருக்களிலும் நிறுத்தப்படுவதால் போக்குவத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாகூர் தர்காவிற்கு வரும் வாகனங்களுக்கு கடைத்தெருவில் ஒரு வழிப்பாைத அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்