< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
|18 Oct 2023 12:15 AM IST
தொடர்ந்து சாராயக்கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாகை மாவட்டத்தில் வெளி மாநில சாராயம், மது கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வேளாங்கண்ணி அருகே செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செல்வம் (வயது38), நாகை நல்லியான் தோட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (32) ஆகிய 2 பேர் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் செல்வம், பிரகாஷ் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.