< Back
மாநில செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே ஏரி மதகு உடைந்து விளைநிலங்களில் பாயும் தண்ணீர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே ஏரி மதகு உடைந்து விளைநிலங்களில் பாயும் தண்ணீர்

தினத்தந்தி
|
14 Nov 2022 3:51 PM IST

அச்சரப்பாக்கம் அருகே ஏரி மதகு உடைந்து தண்ணீர் வீணாக விளைநிலங்களில் பாய்கிறது.

ஏரி மதகு உடைந்தது

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கரிக்கில் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூரில் சுண்டல் ஏரி உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுற்றியுள்ள விளைநிலங்கள் பயன் பெறுகிறது. நேற்று காலை இந்த ஏரியில் உள்ள மதகு உடைந்து தண்ணீர் வீணாக விளைநிலங்களில் பாய்ந்தது.

வீணாக வெளியேறும் ஏரி நீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஏரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தூர்வரப்பட்டு ஏரி புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பருவ மழையின் போது ஏரிக்கு திருவண்ணாமலை, உத்திரமேரூர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதி ஏரிகளில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம்.

மதுராந்தகம் ஏரி 23.3 அடியை கொண்டது. இந்த ஆண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஏரியில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீ்ர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே கலங்கல் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்