< Back
மாநில செய்திகள்
உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேற்றம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
30 Dec 2022 10:15 PM IST

உத்திரமேரூர் அருகே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியானது நிரம்பி 1.70 மில்லியன் கன மீட்டர் முழு கொள்ளளவை எட்டினால் அந்த பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த நிலையில் ஏரியின் ஒரு பகுதி சில ஆண்டுகளாக வலுவிழந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் ஏரியின் 2-வது மதகு அருகே வலுவிழந்த பகுதியில் இருந்து திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏரி நீர் வெளியேற தொடங்கியது.

தகவல் அறிந்த நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் உத்திரமேரூர் தாசில்தார் சம்பந்தபட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மணல் மூட்டைகள் கட்டியும் பொக்லைன் எந்திரம் மூலமும் ஏரி உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏரி நீர் வெளியேற்றத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்