< Back
மாநில செய்திகள்
மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி
மாநில செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி

தினத்தந்தி
|
2 April 2024 6:25 PM IST

மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள கோவில்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது50).கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று 17 வயதான மன வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டு, ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததாக ராஜேந்திரனின் மனைவி லெட்சுமியை (45) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்