< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
மாநில செய்திகள்

பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

தினத்தந்தி
|
15 Jun 2024 4:36 AM IST

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர், பிளஸ்-2 படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயபிரகாஷ் தொடர்ந்து அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் விழ வைத்தார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயபிரகாசிடம் மாணவி வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் மாணவி கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்