< Back
மாநில செய்திகள்
காப்புக்காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

காப்புக்காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி

தினத்தந்தி
|
17 Aug 2022 5:15 PM GMT

உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

உளுந்தூர்பேட்டை

தொழிலாளி

விழுப்புரம் மாவட்டம் டி.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்(வயது 45). தொழிலாளியான இவருக்கு ஆரியமாலா என்ற மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான அருள் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அருள் அவரது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு தனது நண்பருடன் சென்றவர் நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அருளை தேடினர்.

காட்டுப்பகுதியில்

அப்போது கொணலவாடி கிராமத்திற்கு அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உடலில் சிராய்ப்பு காயங்களுடன் அருள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருளின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை நடத்த வேண்டும்

இது குறித்து அருளின் மனைவி ஆரியமாலா கூறும்போது, தனது கணவா் தினந்தோறும் வடமாம்பாக்கம் கிராமத்தில் கண்ணுகுட்டி என்கிற ஏழுமலை என்பவர் நடத்தி வரும் சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்துவிட்டு வருவார். நேற்று முன்தினம் சாராயம் குடிப்பதற்காக சென்ற அவர் சாராய கொட்டகைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். சாராயக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்