< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு
|11 Oct 2023 1:38 AM IST
திருக்காட்டுப்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது35). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை பணிக்காக திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம் ஆய்வு மாளிகை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.