புதுக்கோட்டை
சாகசங்கள் நிறைந்த ஜம்போ சர்க்கஸ்
|சாகசங்கள் நிறைந்த ஜம்போ சர்க்கஸ் நடக்கிறது.
உலக புகழ்பெற்ற ஜம்போ சர்க்கஸ் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெற்று வருகிறது. 1977-ம் ஆண்டு பீகார் தாணப்பூர் நகரில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி தனக்கென தனி இடம் பிடித்து திகழ்கிறது. பறக்கும் பாவை, அபூர்வ சகோதரர்கள், மேரா நாம் ஜோக்கர் என்ற புகழ்பெற்ற படங்களில் இடம்பெற்ற ஜெமினி சர்க்கஸ் குழுவின் சகோதர நிறுவனம் ஆகும். ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா, நேபாளம் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், கேரளா, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலத்தை சார்ந்த 175 கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். சர்க்கஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் 6 பபுன்கள் இடம் பெற்றுள்ளனர். 2 மணி நேரம் நடைபெறும் ஜம்போ சர்க்கஸ் காட்சியில் 26 வகையான சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்படுகிறது. இதில் நடத்தப்படும் மரண கிணறு சாகச நிகழ்ச்சி டார்ச் லைட் ஒளி அமைப்பில் பார்ப்பதற்கு பரவசமூட்டும் வகையில் உள்ளது. மேலும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒட்டகம், குதிரை, நாய் போன்ற விலங்கினங்களும், ஆஸ்திரேலரியன் பஞ்சவர்ண கிளிகளும் சாகசங்கள் புரிந்து குழந்தைகளை மகிழ்விக்கின்றன. சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் 3 காட்சிகளாக நடத்தப்படுகிறது.