நாகப்பட்டினம்
நடவு பணியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை மின்சாரம் தாக்கியது
|வேதாரண்யம் அருகே நடவு பணியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை மின்சாரம் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே நடவு பணியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை மின்சாரம் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடவு பணி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கீழக்காடு பகுதி சேர்ந்தவர் மதியழகன் (வயது62). இவருடைய மனைவி மல்லிகா(55).
இவர்கள் நேற்று வீட்டின் அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான வயலில் நடவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு உள்ள மின்கம்பத்தின் எர்த் கம்பி மதியழகன் வயலில் கட்டப்பட்டு இருந்தது.
மின்சாரம் தாக்கியது
இந்த எர்த் கம்பி அருகே மதியழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் நடவு நடும் பணியில் ஈடுபட்ட போது அவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
உடேன அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரியாப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.