< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலியுடன் தனிமையில் கணவன்... தட்டிக்கேட்ட மனைவிக்கு சரமாரி அடி
மாநில செய்திகள்

கள்ளக்காதலியுடன் தனிமையில் கணவன்... தட்டிக்கேட்ட மனைவிக்கு சரமாரி அடி

தினத்தந்தி
|
20 Jun 2024 9:45 AM IST

கள்ளக்காதலியுடன் இருந்ததை கண்டித்த மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சேகர் தனது வீட்டுக்குள் பார்வதியுடன் இருந்ததாக தெரிகிறது. வெளியே சென்று இருந்த சேகரின் மனைவி சந்திரா வீட்டுக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தன்னுடைய கொழுந்தனார் (சேகரின் தம்பி) தனசேகரை அழைத்தார். இருவரும் வீட்டுக்கதவை தட்டினர். வீட்டுக்குள் இருந்து சேகர், அவருடைய கள்ளக்காதலியுடன் வெளியே வந்தார். இதைக்கண்டு சந்திராவும், தனசேகரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, சேகரை இருவரும் கண்டித்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சேகர், மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தனசேகர் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சேகர், கள்ளக்காதலி பார்வதி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்