< Back
மாநில செய்திகள்
கல்லல் அருகே புரவியெடுப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

கல்லல் அருகே புரவியெடுப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
10 Jun 2022 9:40 AM IST

கல்லல் அருகே புரவியெடுப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகா ,மேல பட்டமங்கலத்தில் ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்மன்,சித்தங்காத்த அய்யனார், ஸ்ரீ கருப்பர் கோவில்களில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இதில் நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமை வகித்தனர்.

மஞ்சுவிரட்டுக்கு முன்னதாக மேலபட்டமங்கலம்,அப்பாகுடிப்பட்டி, கொளுஞ்சிபட்டி,மின்னல்குடிப்பட்டி,பிள்ளையார்பட்டி ஆகிய ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர். மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்கள் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சுவிரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் . மேலும் மஞ்சுவிரட்டுகான பாதுகாப்பு பணியில் திருக்கோஷ்டியூர் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்