< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 May 2023 6:30 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டல் ஊழியர்

கடலூர் மாவட்டம் பன்ருட்டியைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 26). இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (23) என்ற மனைவி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெருவாயலில் உள்ள தனியார் ஓட்டலில் சப்ளையராக தமிழ்மணி வேலை செய்து வந்தார். மேலும் அந்த ஓட்டலின் அருகே தனியே ஒரு வாடகை வீட்டில் அவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தமிழ்மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்