< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை... நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தொடர் கனமழை... நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!

தினத்தந்தி
|
9 Dec 2023 6:28 AM IST

கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

மிக்ஜம் புயல் தாக்கத்தின் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்