< Back
மாநில செய்திகள்
சென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு - போலீஸ் விசாரணை
மாநில செய்திகள்

சென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
20 Jun 2023 4:08 PM IST

குப்பைத் தொட்டியில் கிடந்தது யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குப்பைத் தொட்டியில் 6 குண்டுகளுடன் துப்பாக்கி ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிஷா என்பவர் குப்பைத் தொட்டியில் துப்பாக்கியை வீசிச் சென்றதாக தெரிய வந்தது. மேலும் அது உரிமம் பெற்ற துப்பாக்கி என்பதும், யானைகளை விரட்ட பயன்படுத்தப்படுவது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி எதற்காக குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்