< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை
|12 Sept 2023 11:51 AM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் பெயர்ப்பலகையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில், ஒரகடம் செல்லும் சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் திருக்கச்சூர் பெரியார் நகர் அருகே வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப் வழிகாட்டி பெயர்ப்பலகை சில நாட்களுக்கு முன்பு முறிந்து சாலையில் விழுந்தது. ஆனால் சாலையில் விழுந்து கிடக்கும் பெயர்ப் பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள், பெயர்ப்பலகை மீது மோதி விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பெயர்ப்பலகையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.