< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆந்திர மாநிலத்தில் சாலையில் ஊர்ந்து சென்ற மீன்கள் கூட்டம்... வைரலாக பரவிய வீடியோ
|21 July 2023 9:51 PM IST
சாலையில் மீன்கள் ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள வஜ்ரபு கோனேரு என்ற கிராமத்தில், சாலையில் ஏராளமான மீன்கள் ஊர்ந்து செல்வதை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சாலையில் மீன்கள் ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மீன்கள் எவ்வாறு சாலைக்கு வந்தன என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அருகில் உள்ள குட்டையில் இருந்து மழை காரணமாக இந்த மீன்கள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.