திருவாரூர்
மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலி
|மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலியானார்.
கோட்டூர்;
மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலியானார்.
பட்டதாரி இளம்பெண்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேனிய தெருவை சேர்ந்தவர் செல்வமுத்து(வயது 75). இவர், பல் பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி.இவர்களுடைய மகள் ஹரிணி(21). பட்டப்படிப்பு முடித்துள்ள ஹரிணி வீட்டில் இருந்து வந்தாா்.
மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
நேற்று முன்தினம் மாலை பூைஜக்காக ஹரிணி தங்களது வீட்டின் 2-வது மாடிக்கு சென்று பூ பறித்துக்கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கால்தவறி அவர் கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஹாிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பூஜைக்கு பூ பறிக்க சென்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மன்னார்குடி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.